Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சர் விஜய் தலைமையில் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் – கிரீன்வேஸ் சாலையில் பரபரப்பு!

முதலமைச்சர் விஜய் தலைமையில் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் – கிரீன்வேஸ் சாலையில் பரபரப்பு!

-

- Advertisement -

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகமான பாமினி இல்லத்தில் நடைபெற்று வருகிறது.முதலமைச்சர் விஜய் தலைமையில் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் – கிரீன்வேஸ் சாலையில் பரபரப்பு!

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் பங்கேற்க கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கடந்த ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களைப் புறக்கணித்த இடதுசாரி கட்சிகளின் எம்எல்ஏக்களும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது, அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிகாரிகளின் செயல்பாடுகள், தொகுதிகளில் நிலவும் நிர்வாகச் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அண்மையில் மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களுடன் நாளை ஆலோசனை நடத்தும் முதலமைச்சர் விஜய்!

MUST READ