spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கள்ளக்காதலால் விபரீதம்- இளம் பெண் அடித்துக் கொலை

கள்ளக்காதலால் விபரீதம்- இளம் பெண் அடித்துக் கொலை

-

- Advertisement -

கள்ளக்காதலால் விபரீதம்- இளம் பெண் அடித்துக் கொலை

இராமநாதபுரம் அருகே தந்தையை கொலை செய்த பெண் ஒரு வருடத்திற்கு பின் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ambulanceஇராமநாதபுரம் அருகே காவனூர் ஆசாரி மடத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கு திருமணமாகி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பவித்ரா தனது தாய் பாக்கியத்தின் உதவியுடன் இடையர் வலசையைச் சேர்ந்த டிரைவர் ஒருவருடன் கள்ள காதல் செய்து பழகி வந்துள்ளது தெரிந்ததால் கணவர் பிரிந்து சென்றார். கள்ள காதலை தந்தை ரவி கண்டித்ததால் கடும் கோபமடைந்த தாயும், மகளும் கடந்தாண்டு மார்ச் மாதம் ரவி இரவில் வீட்டில் தூங்கிய போது வீட்டை பூட்டி விட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தனர்.இந்த கொலை வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமின் பெற்ற பாக்கியம், பவித்ரா மற்றும் அவரது குழந்தைகள் ரவியை கொலை செய்த அதே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொத்தனார் ஒருவருடன் பவித்ராவிற்கு காதல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தந்தையை கொலை செய்ததால் தந்தையின் உறவினர்கள் கடும் கோபத்தில் இருந்த நிலையில், புதிய காதல் மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Murder
இந்நிலையில் ரவியின் தம்பி உச்சிப்புளியில் வசித்து வரும் முருகேசனின் மகன் டிரைவர் மணி இன்று மாலை பவித்ரா மட்டும் தனியாக வீட்டில் இருந்த போது ராடு கம்பியால் பவித்ராவின் தலையில் பயங்கரமாக அடித்து கொலை செய்துள்ளான். கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மணியை ஊர் மக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பவித்ராவின் உடலை கைப்பற்றிய பஜார் போலீசார் உடற்கூறாயிவுக்காக இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமணைக்கு அனுப்பி வைத்து, மணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ