Homeசெய்திகள்தமிழ்நாடுவி.பி.சிங் நினைவு நாளில்  இட ஒதுக்கீட்டு உச்சவரம்பைத் தகர்க்க உறுதியேற்போம்!" - அன்புமணி ராமதாஸ்

வி.பி.சிங் நினைவு நாளில்  இட ஒதுக்கீட்டு உச்சவரம்பைத் தகர்க்க உறுதியேற்போம்!” – அன்புமணி ராமதாஸ்

-

- Advertisement -

வி.பி.சிங்

 இந்தியாவின் சமூகநீதிப் பயணத்தில் புதிய அத்தியாயத்தை எழுதிய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் 18-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு,  பாமக தலைவர்  அன்புமணி இராமதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவில் முழுமையான சமூகநீதி மலர 50% இட ஒதுக்கீட்டு உச்சவரம்பு தகர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

  • மண்டல் ஆணையமும் 40 ஆண்டுகால உரிமையும்: நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்பே இல்லை எனக் கிடப்பில் போடப்பட்டிருந்த மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளைத் தோண்டி எடுத்து, மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக மறுக்கப்பட்டிருந்த இட ஒதுக்கீட்டை வழங்கிய மாமனிதர் வி.பி.சிங். ஆணை பிறப்பித்தது மட்டுமின்றி, அனைத்துத் தடைகளையும் தகர்த்து அது நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் அவர் போராடினார்.

  • உயர்கல்வியில் 27% இட ஒதுக்கீட்டிற்கு உத்வேகம்: கொள்கை உறுதியுடன் போராடினால் சமூகநீதியை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர் விதைத்தார். அவர் தந்த நம்பிக்கைதான், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை மருத்துவர் இராமதாஸ் போராடிப் பெற்றுத் தர உத்வேகம் அளித்தது.

  • சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: 96 ஆண்டுகளுக்குப் பிறகு, அடுத்த ஆண்டு மத்தியிலும் மாநிலத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதை நாம் போராடிச் சாதிக்க நம்பிக்கை அளித்ததும் வி.பி.சிங் அவர்கள்தான்.

  • 50% உச்சவரம்பைத் தகர்க்க உறுதி: இந்தியாவில் முழுமையான சமூகநீதி மலர வேண்டுமெனில் இட ஒதுக்கீட்டில் உள்ள 50% உச்சவரம்பு தகர்க்கப்பட வேண்டும். அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதே நமது லட்சியம். அந்த லட்சியத்தை வென்றெடுக்க வி.பி.சிங் அவர்களின் நினைவு நாளில் உறுதியேற்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

    https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/anbumani-urges-tamil-nadu-government-to-find-permanent-solution-to-vice-chancellor-appointment-issue/253850

MUST READ