Homeசெய்திகள்சினிமா​ஜெய் - பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய படம்.... வீடியோவுடன் வெளியான புதிய அறிவிப்பு!

​ஜெய் – பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய படம்…. வீடியோவுடன் வெளியான புதிய அறிவிப்பு!

-

- Advertisement -

ஜெய் – பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.​ஜெய் - பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய படம்.... வீடியோவுடன் வெளியான புதிய அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் நடிகர் ஜெய் ‘சென்னை 600028’, ‘கோவா’, ‘ராஜா ராணி’, ‘எங்கேயும் எப்போதும்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்தார். அதேசமயம், நடிகை பிரியங்கா மோகன் ‘டாக்டர்’, ‘டான்’ போன்ற படங்களின் மூலம் ஏராளமான ரசிகர்களைத் தன் பக்கம் கவர்ந்திழுத்தார். அதன் பிறகு இவர் பிற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் சிம்புவின் ‘அரசன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் மஞ்சணத்தி படத்தையும் கைவசம் வைத்துள்ளார். ​இந்நிலையில், நடிகர் ஜெய் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் இணைந்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகின்றனர். இப்படத்தை ‘சக்ரா’ படத்தின் இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் இயக்குகிறார். ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.

​க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில் ஜெய், பிரியங்கா மோகன் ஆகியோருடன் இணைந்து யோகி பாபு, நாசர் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாகப் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே, இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ