Homeசெய்திகள்இந்தியாவெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பதிவு!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பதிவு!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முருகப்பெருமானை போற்றும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தூணில் பாரம்பரிய முறைப்படி கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு வெளியான சில மணிநேரங்களிலேயே பிரதமர் மோடி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வாசகத்தை தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளிலும் அவர் பதிவிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு:

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிறைவேற்றப்படாததற்கு வேதனை தெரிவித்தது.

நீதிமன்ற உத்தரவுகள் மெத்தனமாக கையாளப்படுவதை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும், இந்த விவகாரத்தை இரும்புக்கரம் கொண்டு கையாள வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் நீதிமன்றம் கடுமையாக தெரிவித்தது.

மேலும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்றும், உச்சிப்பிள்ளையார் கோவிலில் ஏற்றப்பட்ட தீபத்தில் இருந்து தீபத்தை எடுத்துச் சென்று தூணில் ஏற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்ற பதிவு தற்போது அரசியல் மற்றும் ஆன்மிக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்று இந்து அமைப்பினர் இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்!

MUST READ