Homeசெய்திகள்மாவட்டம்நாகர்கோவிலில் வெட்டுக்கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் – பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கைது!

நாகர்கோவிலில் வெட்டுக்கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் – பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கைது!

-

- Advertisement -

நாகர்கோவிலில் நீண்ட வெட்டுக்கத்தியை கையில் வைத்துச் சுழற்றுவது போல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து எச்சரித்து விடுவித்தனர்.நாகர்கோவிலில் வெட்டுக்கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் – பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட வெட்டுக்கத்தியை கையில் வைத்துச் சுழற்றுவது போன்ற காட்சிகளுடன் பின்னணி இசையையும் இணைத்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலானது.

மாணவரின் இத்தகைய செயலைப் பார்த்து மற்ற மாணவர்களும் இதேபோன்று ஆயுதங்களுடன் வீடியோக்களை வெளியிடும் வாய்ப்பு இருப்பதால், சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி கோட்டார் காவல் நிலைய ஏட்டு ஜெரோம் ஜோன்ஸ் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, இன்ஸ்டாகிராம் கணக்கின் முகவரி மற்றும் தொழில்நுட்ப விவரங்களைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், வீடியோவைப் பதிவிட்டது நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர், மாணவரின் எதிர்காலம் மற்றும் கல்வியைக் கருத்தில் கொண்டு, இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் இனி ஈடுபடக்கூடாது என பெற்றோர் முன்னிலையில் கடுமையாக எச்சரித்த போலீசார், அவரைக் காவல் நிலையத்திலிருந்து விடுவித்தனர்.

ஆயுதங்களைக் கையில் ஏந்தி சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பதிவிடுவது, வன்முறையைத் தூண்டும் வகையிலான கருத்துகளைப் பகிர்வது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ராசிபுரம் அருகே லாரியில் பழைய இரும்புகளை ஏற்றியபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி: 2 பேர் காயம்!

MUST READ