Homeசெய்திகள்சினிமாஅப்பா பிறந்தநாளில் மாஸான அப்டேட் உடன் வந்த மகேஷ் பாபு!

அப்பா பிறந்தநாளில் மாஸான அப்டேட் உடன் வந்த மகேஷ் பாபு!

-

- Advertisement -

மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு, கடைசியாக ‘சர்க்காரு வாரி பாட்டா’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஆண்டு மே மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதைத்தொடர்ந்து, மகேஷ்பாபு தனது 28 வது படத்தை இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். மகேஷ் பாபு ஏற்கனவே திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் அத்தாடு மற்றும் கலேஜா படங்களில் நடித்திருந்தார். அந்தப் படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருக்கிறது.

மூன்றாவது முறையாக இவர்கள் இணையும் இந்த படத்திற்கு ‘குண்டுர் காரம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மகேஷ்பாபுவுடன் பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், சுனில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோவை மகேஷ்பாபுவின் தந்தையும், பழம்பெரும் நடிகருமான மறைந்த கிருஷ்ணா அவர்களின் பிறந்தநாள் அன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவில் மகேஷ்பாபு மாஸான தோற்றத்தில் தெறிக்க விடுகிறார். இது ரசிகர்களிடையே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

MUST READ