spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபேனர் விழுந்து விபத்து- மூன்று பேர் மீது கொலை வழக்குப்பதிவு!

பேனர் விழுந்து விபத்து- மூன்று பேர் மீது கொலை வழக்குப்பதிவு!

-

- Advertisement -

 

பேனர் விழுந்து விபத்து- மூன்று பேர் மீது கொலை வழக்குப்பதிவு!
Video Crop Image

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு புறமும் உள்ள காலி நிலத்தில் பெரிய அளவில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வலதுப் புறத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களில் ஒரு பேனர் யாரும் எதிர்பாராத நேரத்தில் சரிந்து விழுந்ததில், மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

we-r-hiring

ஆடல், பாடல் நிகழ்ச்சி- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இது தொடர்பாக தகவலறிந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், பேனர் வைத்த ஒப்பந்ததாரர் பாலாஜி, துணை ஒப்பந்ததாரர் பழனிசாமி, பேனர் வைக்க நிலம் வழங்கிய நிலத்தின் உரிமையாளர் ராமசாமி ஆகிய மூன்று பேர் மீதும் காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது ஐபிசி 302 மற்றும் 308 ஆகிய இரண்டு பிரிவுகளில் கோவை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, அவர்களை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்கும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“பட்டாசுக் கிடங்கு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 3 லட்சம் நிவாரணம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மேலும், காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ