spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆடல், பாடல் நிகழ்ச்சி- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

ஆடல், பாடல் நிகழ்ச்சி- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

-

- Advertisement -

 

ஆடல், பாடல் நிகழ்ச்சி- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
File Photo

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தமிழக காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

we-r-hiring

“பட்டாசு ஆலைகளை அரசு கண்காணிக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த காவல்துறை அனுமதி வழங்குவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி, அடிப்படையில் அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு இ.கா.ப., வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு மனு அளிக்கப்பட்டால், ஏழு நாட்களுக்குள் விழாக்குழுவுக்கு பதிலளிக்க வேண்டும். கலாச்சார நிகழ்வுகள் மட்டுமே நடத்த வேண்டும். ஆபாச காட்சிகள், நடனம் எதுவும் இல்லை என்பதை உறுதிச் செய்ய வேண்டும். அதேபோல், இரவு 10.00 மணிக்கு மேல் ஆடல் பாடல் நிகழ்ச்சி நீடிக்கக் கூடாது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவுக் கோரிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!

நிகழ்ச்சியில் இரட்டை அர்த்த பாடல்கள் இடம் பெறக் கூடாது. பெண் கலைஞர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படக் கூடாது என்பன உள்ளிட்ட நெறிமுறைகளும் இடம் பெற்றுள்ளன.

MUST READ