
1990 – களில் தமிழ் சினிமா காதல் தேவதைகளின் காலக்கட்டம் எனலாம். அதில், கனவு தேவையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. அசத்தலான நடனத்திற்கு பெயர் பெற்ற ரம்பா, இன்று (ஜூன் 05) 47வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ளார்.

அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!
தமிழ் சினிமாவின் 1990 காலக்கட்டத்தின் கனவுத் தேவதை. ஹாலிவுட்டின் மெர்லின் மன்றோவைத் தெரியாதவர்களுக்கு அழகிய லைலா ரம்பாதான் சினிமா மாடல். ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரம்பா, பள்ளிப் பருவத்திலேயே நாடகத்தில் கலந்து கொண்டு பெயர் வாங்கிய அவருக்கு, திரை அறிமுகம் கொடுத்தது தெலுங்கு சினிமா.
கடந்த 1992- ஆம் ஆண்டு வெளியான ‘ஆ ஒக்கட்டி அடக்கு’ படம் ரம்பாவின் முதல் திரைப்படம். தெலுங்கு சினிமாவுக்கு பின் உழவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் ரம்பா. அதன் பிறகு, ரம்பா நடித்த படங்களும், அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களும் ஹிட் ஆக, ரசிகர்களின் நெஞ்சங்களில் ரம்பா சிக்னேச்சர் ஹீரோயினாகப் பதிவானார்.
ஹிட் வரிசையில் முக்கிய படம் என்றால், நவரச நாயகன் கார்த்திக்குடன் இணைந்த ‘உள்ளதை அள்ளித்தா’ திரைப்படம். அதன் பிறகு, சுந்தரபுருஷன், விஐபி என அன்றைய ஹீரோக்களுடன் இணைந்து ஹிட் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார் ரம்பா. ரசிகர்களின் செல்வாக்கினால், முன்னணி நடிகையான இவருக்கு, மாஸ் ஹீரோக்களின் படங்களிலில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின.
ரஜினிகாந்துடன் ‘அருணாச்சலம்’, கமல்ஹாசனுடன் ‘காதலா காதலா’, விஜய்யுடன் ‘மின்சார கண்ணா’, ‘நினைத்தேன் வந்தாய்’ உள்ளிட்ட படங்களில் நடித்து, வெற்றி ஹீரோயினாக வலம் வந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் கதையில் உருவான ‘பெண் சிங்கம்’ திரைப்படம் தான் ரம்பா தமிழ் சினிமாவில் நடித்த கடைசித் திரைப்படம்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்த மல்யுத்த வீரர்கள்!
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் 70- க்கும் மேற்பட்டத் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2010- ஆம் ஆண்டு தொழிலதிபர் இந்திர குமாரை திருமணம் செய்துக் கொண்ட இவர், குடும்பத்துடன் கனடாவில் குடியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.