spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகாங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறாரா சச்சின் பைலட்?- விரிவான தகவல்!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறாரா சச்சின் பைலட்?- விரிவான தகவல்!

-

- Advertisement -

 

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறாரா சச்சின் பைலட்?- விரிவான தகவல்!
Photo: Sachin Pilot Twitter Page

காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தி காரணமாக, அக்கட்சியில் இருந்து விரைவில் புதிய கட்சியை சச்சின் பைலட் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

எம்.ஆர்.பி.ஐ விட கூடுதலாக விற்பனை செய்த அங்காடி ரூபாய் 10,000 அபராதம் விதிப்பு!

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கும், மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோரை டெல்லிக்கு நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.

இந்த நிலையில், சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தனிக்கட்சியைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜூன் 11- ஆம் தேதி அவர் புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாகவும், அந்த கட்சிக்கு பிரகதீஸில் காங்கிரஸ் என பெயர் வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவலை அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை!

ராஜஸ்தானில் ஆட்சி செய்த அப்போதைய முதலமைச்சர் வசுந்தரா ராஜே தலைமையிலான அரசு செய்த ஊழல்கள் குறித்து முறையான விசாரணைக் குழுவை அமைத்து, விசாரிக்க வலியுறுத்தி, ஆளுங்கட்சிக்கு எதிராக மாநிலம் முழுவதும் சச்சின் பைலட் யாத்திரை மேற்கொண்டிருந்தார்.

சச்சின் பைலட் மத்திய அமைச்சராகவும், ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ