spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎம்.ஆர்.பி.ஐ விட கூடுதலாக விற்பனை செய்த அங்காடி ரூபாய் 10,000 அபராதம் விதிப்பு!

எம்.ஆர்.பி.ஐ விட கூடுதலாக விற்பனை செய்த அங்காடி ரூபாய் 10,000 அபராதம் விதிப்பு!

-

- Advertisement -

 

எம்.ஆர்.பி.ஐ விட கூடுதலாக விற்பனை செய்த அங்காடி ரூபாய் 10,000 அபராதம் விதிப்பு!
File Photo

பேட்டரிக்கு அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட 25 ரூபாய் கூடுதலாக வசூலித்த அங்காடிக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் 10,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

we-r-hiring

அரிசிக்கொம்பன் வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றம்!

கோவை மாவட்டம், குருசாமி நகரைச் சேர்ந்த ரவீந்திரநாத் என்பவர், வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள பல்பொருள் அங்காடியில், கடந்த 2021- ஆம் ஆண்டு பேட்டரி வாங்கியுள்ளார். 16 ரூபாய் மதிப்புள்ள பேட்டரிக்கு 41 ரூபாய் என ரசீது போட்டுக் கொடுத்தால், கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை!

இந்த மனுவை விசாரித்து வந்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் தங்கவேல், உறுப்பினர் ஜி.சுகுணா ஆகியோர் நேற்று (ஜூன் 06) தீர்ப்பளித்தனர். அதன்படி, மனுதாரரிடம் இருந்து கூடுதலாகப் பெறப்பட்ட 25 ரூபாயைத் திருப்பி அளிப்பதோடு, மனுதாரரின் மன உளைச்சலுக்கு இழப்பீடாக 10,000 ரூபாயும், வழக்கு செலவாக 5,000 ரூபாயும் வழங்க உத்தரவிட்டனர்.

MUST READ