spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அமமுக - அதிமுக இணைந்து செயல்பட தொடங்கிவிட்டது: டிடிவி தினகரன்

அமமுக – அதிமுக இணைந்து செயல்பட தொடங்கிவிட்டது: டிடிவி தினகரன்

-

- Advertisement -

அமமுக – அதிமுக இணைந்து செயல்பட தொடங்கிவிட்டது: டிடிவி தினகரன்

ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் மகன் சண்முகபிரபு திருமண நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டனர்.

Image

ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய டிடிவி தினகரன், “சிலரின் பேராசையினால் கனத்த இதயத்தோடு பிரிந்து அமமுக தொடங்கினோம். இப்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக நிர்வாகிகளை ஒரே மேடையில் சந்திப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. அம்மாவின் ஆட்சியை அமைக்க இணைந்துள்ளோம். அமமுக – அதிமுக இணைந்து செயல்பட தொடங்கிவிட்டது” என்றார்.

we-r-hiring

Image

தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணம். ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்பதற்கான பிள்ளையார் சுழி இன்று போடப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பி இடையே ஏற்படும் மனஸ்தாபம் தான் எனக்கும் டிடிவி தினகரனுக்கு இடையே இருந்தது. அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமை என்பதை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா. தொண்டர்கள்தான் அதிமுகவில் ஆணிவேர். வைத்திலிங்கம் இல்ல திருமண நிகழ்ச்சியில் டிடிவி கலந்துகொண்டது மகிழ்ச்சி. அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்” எனக் கூறினார்.

MUST READ