Homeசெய்திகள்அரசியல்திமுகவின் இணையதளம் புதுப்பிப்பு

திமுகவின் இணையதளம் புதுப்பிப்பு

-

- Advertisement -

திமுகவின் இணையதளம் புதுப்பிப்பு

திமுகவின் வரலாறு மற்றும் சாதனைகளை அறிந்துக்கொள்ள www.dmk.in என்ற இணையதளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார்.

Website

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டு முழுக்க சிறப்பாக கொண்டாட திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் கலைஞர் நூற்றாண்டு விழாக்களின் ஒரு பகுதியாக திமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளபக்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

அதில் திமுகவின் குறிக்கோள், வரலாறு, சாதனைகள், நிகழ்ச்சிகள், சரித்திர நிகழ்வுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “இயக்க வரலாறு, அண்மை நிகழ்வுகள், நமது சாதனைகள் என இன்னும் பல தகவற்புதையல்கள் நிறைந்த, புதுப்பொலிவூட்டப்பட்ட http://DMK.in கழக வலைத்தளத்தைக் #கலைஞர்100 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று தொடங்கி வைத்தேன். கையெழுத்துப் பிரதி இதழ்கள் முதல் கணினி வரை கழகம் கடந்த வந்த நீண்ட பயணத்தைத் தலைமுறைகள் தாண்டியும் அறியச் செய்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ