லியோ படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்க சஞ்சய் தத், அர்ஜுன் ,பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ் என பல நட்சத்திர பட்டாளங்கள் இதில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது .
சமீபத்தில் படத்தில் வரும் பாடல் காட்சி ஒன்று பிரம்மாண்டமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பாடல் ரசிகர்களை குத்தாட்டம் போடச் செய்யும் விதமாக அமைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ், விஜய், அனிருத் காம்பினேஷனில் வெளிவந்த ‘மாஸ்டர்’ படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் சூப்பர் ஹிட். இந்நிலையில் அனிருத் லியோ படத்தில் வரும் ஒரு பாடலுக்கு விஜயுடன் கௌரவ வேடத்தில் தோன்ற விருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்ததாகவும் அந்த காட்சிகள் சிறப்பாக வந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அனிருத், ஏற்கனவே ‘வணக்கம் சென்னை’ படத்தில் வந்த சென்னை சிட்டி கேங்ஸ்டர்”, மான் கராத்தே படத்தில் ‘ஓபன் தி டாஸ்மாக்” மாரி படத்தில் “மாரி தர லோக்கல்” பீஸ்ட் படத்தின் ‘ஜாலியோ ஜிம் கானா’ போன்ற பாடல்களில் ஏற்கனவே நடித்துள்ளார்.
தளபதி விஜயுடன் அனிருத் திரையில் தோன்ற விற்பதால் இந்த காம்பினேஷனை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர்.லியோ படத்தின் சூட்டிங் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது வரும் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை விடுமுறையில் இப்படம் வெளியாகும் என ஏற்கனவே பட குழு அறிவித்துள்ளது.