கடந்த 2015 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வேதாளம் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் லட்சுமி மேனன் ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர். சிறுத்தை சிவா இயக்கிய இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தற்போது இந்தப் படம் தெலுங்கில் ‘போலா சங்கர்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.
மெஹர் ரமேஷ் இந்த படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, அஜித்தின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் கீர்த்தி சுரேஷ் லட்சுமிமேனன் கதாபாத்திரத்திலும் தமன்னா ஸ்ருதிஹாசன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
ஏகே என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பிலும் சாகர் மகதி இசையிலும் இப்படம் உருவாகி வருகிறது.
டட்லி இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று டப்பிங் படம் பணிகள் தொடங்கின. மேலும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வருகின்ற ஜூன் 24ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர்.