பிரித்திவிராஜ், மலையாளத் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்.
இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழிலும் சில படங்களில் நடித்து ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்றவர். மேலும் இவர் லூசிபர், ப்ரோ டாடி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கி இருந்தார்.
இவர் தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் ஆடு ஜீவிதம், விலயாத் புத்தா போன்ற படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஜெயன் நம்பியார் இயக்கும் விலாயத் புத்தா படத்தின் ஆக்சன் காட்சிகள் கொச்சி பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது.இந்த ஆக்ஷன் காட்சிகளில் நடித்துக் கொண்டிருக்கும் போது விபத்து ஒன்றில் சிக்கி பிரித்விராஜுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து கொச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரித்திவிராஜுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று பிரித்திவிராஜ்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
அறுவை சிகிச்சையை தொடர்ந்து ஓய்வு பெற்று முற்றிலும் குணமடைந்த பிறகு படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.


