spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை மெட்ரோ ரயில்களில் ஒரே நாளில் 2.81 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் ஒரே நாளில் 2.81 லட்சம் பேர் பயணம்

-

- Advertisement -

சென்னை மெட்ரோ ரயில்களில் ஒரே நாளில் 2.81 லட்சம் பேர் பயணம்

ஒரே நாளில் சென்னை மெட்ரோ ரயில்களில் 2.81 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

metro train
metro train

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 23-ம் தேதி அன்று ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2,81, 503 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 23,745 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 14.935 பயணிகளும் கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் 14,938 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.

we-r-hiring

அந்த வகையில், ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக 13.01.2023 அன்று 2.65,847 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக 10.12.2023 அன்று 2,61,668 பயணிகளும், மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 10.03.2023 அன்று 2,58,671 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 28.04.2023 அன்று 2,68,680 பயணிகளும் மே மாதத்தில் அதிகபட்சமாக 24.05.2023 அன்று 2,64,974 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வரும் மெட்ரோ சேவையில் ஒரே நாளில் 2.81 லட்சம் பேர் பயணம் செய்துள்ளது இதுவே முதல்முறையாகும்.

MUST READ