spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதூத்துக்குடி மெர்கண்டைல் வங்கி தலைமையகத்தில் ஐடி ரெய்டு

தூத்துக்குடி மெர்கண்டைல் வங்கி தலைமையகத்தில் ஐடி ரெய்டு

-

- Advertisement -

தூத்துக்குடி மெர்கண்டைல் வங்கி தலைமையகத்தில் ஐடி ரெய்டு

தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் மத்திய வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் 546 கிளைகளைக் கொண்ட தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு செயல்படுகின்றது. இந்நிலையில் தூத்துக்குடி வி.இ.சாலையில் உள்ள இரண்டு இடத்தில் செயல்பட்டு வரும் தலைமை அலுவலகத்தில் இன்று காலை வழக்கமான வங்கி அலுவல் பணிகள் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் மதுரை, நெல்லை, தூத்துக்குடி வருமானத்துறை அதிகாரிகள் 10-கும் மேற்பட்டோர் திடீரென உள்ளே புகுந்து வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டனர்.

we-r-hiring

it raid

இந்த சோதனை இன்று காலை துவங்கி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சோதனை எதற்காக நடைபெறுகின்றது என்று உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறாத நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் கணக்குகள் தொடர்பாகவும் மற்றும் அவர் சார்ந்த பினாமிகளின் கணக்குகள் தொடர்பாகவும் மேற்படி சோதனை நடைபெறுவதாக ஒரு தரப்பும் தற்போது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் பணியாளர் சேர்க்கை நடைபெறுவதாகவும் அதில் பணம் பெற்றுக் கொண்டு காலி பணியிடங்களை நிரப்புவதாக வந்த தகவல்களை அடுத்தும் வருமானவரித்துறை சோதனை நடைபெறுவதாக மற்றொரு தரப்பும் தெரிவித்துள்ளது.

MUST READ