நடிகர் அதர்வாவின் அடுத்த படத்தை இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் அதர்வா கடைசியில் நடித்த குருதி ஆட்டம், பட்டத்து அரசன் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.தற்போது இவர் ‘மத்தகம்’ என்ற வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார். விரைவில் அந்த வெப் சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தனது அடுத்த படத்தை இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

நெல்சன் வெங்கடேசன், கடந்த 2016 ஆம் ஆண்டு அட்டக்கத்தி தினேஷ், நிவேதா பெத்துராஜ், ரித்விகா, கருணாகரன், ரமேஷ் திலக் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.
அதன் பின் எஸ் ஜே சூர்யா மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் மான்ஸ்டர் திரைப்படத்தையும், அதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஃபர்ஹானா திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இவர் இயக்கிய இந்த மூன்று படங்களுமே வித்தியாசமான கதைகளில் உருவானது.இதைத்தொடர்ந்து அதர்வாவுடன் இணைந்து புதிய படத்தை இயக்க இருக்கிறார்.
இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.