spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஸ்ரீரங்கம் கோயிலில் வரும் ஞாயிறு அன்று மூலஸ்தான சேவை கிடையாது

ஸ்ரீரங்கம் கோயிலில் வரும் ஞாயிறு அன்று மூலஸ்தான சேவை கிடையாது

-

- Advertisement -

ஸ்ரீரங்கம் கோயிலில் வரும் ஞாயிறு அன்று மூலஸ்தான சேவை கிடையாது

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வரும் ஞாயிறு முதல் திங்கள் மாலை 4.00 மணி வரை மூலஸ்தான சேவை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Image

இது தொடர்பாக திருக்கோவில் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வருகிற ஆனி மாதம் 17-ம் தேதி (02.07.2023) ஞாயிற்றுக்கிழமை அன்று மூலவர் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் என்பதால் அன்று முழுவதும் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்ய இயலாது.

we-r-hiring

மறுநாள் ஆனி மாதம் 18-ம் தேதி (03.07.2023) திங்கள்கிழமை அன்று மாலை 4.30மணி முதல் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்யலாம். மேலும் மூலவர் பெருமாளுக்கு தைலக்காப்பு சாற்றப்பட்டுள்ளதால் அது உலரும் வரை மூலவர் பெருமாளின் திருமுகத்தை மட்டுமே தரிசிக்க இயலும் என்று பக்தர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ