spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாநான்கு மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்து பா.ஜ.க. தலைமை அறிவிப்பு!

நான்கு மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்து பா.ஜ.க. தலைமை அறிவிப்பு!

-

- Advertisement -

 

File Photo

பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா, ஜார்க்கண்ட் நான்கு மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்து பா.ஜ.க.வின் தேசிய தலைமை அறிவித்துள்ளது.

we-r-hiring

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘ஜீனி’…. சூட்டிங் எப்போது?

பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் இன்று (ஜூலை 04) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பா.ஜ.க.வின் தேசிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெ.பி.நட்டா உத்தரவின் படி, தெலுங்கானா மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டி, தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவராக மறைந்த முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மகள் புரந்தேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

கையில் தீப்பந்தத்துடன் நிற்கும் கமல்…… அதிரடியாக வெளியான ‘KH233’ அறிவிப்பு வீடியோ!

பஞ்சாப் மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக சுனில் ஜாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக முன்னாள் முதலமைச்சர் பாபுலால் மராண்டி நியமிக்கப்பட்டுள்ளார்”. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ