சிறுத்தை சிவா, சூர்யா கூட்டணியில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இந்த படத்தில் கே ஜி எஃப் படம் வில்லன் அவினாஷ் நடிக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் கீழ் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மேலும் ஒரு வரலாற்று சரித்திர படமாக உருவாகி வரும் இந்த படம் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. 3டி அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாராகி வரும் இந்த படம் பிரம்மாண்டமாக சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் கொடைக்கானலில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று சமீபத்தில் தகவல்கள் கிடைத்தன.

இந்நிலையில் இந்த படம் சம்பந்தமான நிறைய சர்ப்ரைஸ் ஆன அப்டேட்டுகளை வருகின்ற ஜூலை 23 இல் சூர்யாவின் பிறந்தநாள் அன்று படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பல ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.