சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் சார்பில் கலை மற்றும் விருதுகள் வழங்கும் விழா
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் ஆரம்பித்து 23 ஆண்டுகள் நிறைவு பெற்று சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.
இதனை சிறப்பிக்கும் வகையில் CD-23 என்ற பெயரில் பிரம்மாண்டமான கலை விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா வரும் ஜூலை 30 தேதி அன்று சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த விழாவில் திரைப்படத் துறை மற்றும் சின்னத்திரையை சேர்ந்த பிரபல இயக்குநர்கள், எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் இசையமைப்பாளர்கள், நடன கலைஞர்கள், சண்டை பயிற்சி கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒலிப்பதிவாளர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், தயாரிப்பு நிர்வாகிகள், ஒப்பனை கலைஞர்கள், தையற் கலைஞர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்து கொள்கின்றனர்.
மேலும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்கின்றனர்.