மணிப்பூர் முதல்வரை நீக்குங்கள்! மோடிக்கு கார்கே கோரிக்கை
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விரிவான விளக்கமளிக்க வேண்டும் என ‘INDIA’ எதிர்பார்க்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் இளம்பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க கோரி மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பிரதமர் மோடி அவர்களே, மணிப்பூர் சம்பவம் குறித்து நீங்கள் நேற்று நாடாளுமன்றத்தில் பேசவில்லை. உண்மையிலேயே உங்களுக்கு கோபம் வந்திருந்தால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் குறித்து பொருத்தமற்ற ஒப்பீடு செய்வதற்கு பதிலாக மணிப்பூர் முதலமைச்சரை நீக்கியிருக்க வேண்டு. ஒற்றை சம்பவம் குறித்து மட்டுமல்லாமல், 80 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாநிலத்திலும் ஒன்றியத்திலு உங்களது அரசு என்ன செய்கிறது என விளக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விரிவான விளக்கமளிக்க வேண்டும் என ‘INDIA’ எதிர்பார்க்கிறது” என வலியுறுத்தினார்.