- Advertisement -

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 85-வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பா.ம.க.வின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தி.முக. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “இன்று 85-ஆவது பிறந்தநாள் காணும் மருத்துவர் அய்யா ராமதாஸுக்கு வாழ்த்துகள்! இந்த மண்ணில் வேரூன்றியுள்ள சமூகநீதி அரசியலும் தமிழ் உணர்வும் தழைக்கத் தங்களது உழைப்பு பயன்படட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.