spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகோடநாடு பற்றி அண்ணாமலை பேசாதது ஏன்?- சீமான்

கோடநாடு பற்றி அண்ணாமலை பேசாதது ஏன்?- சீமான்

-

- Advertisement -

கோடநாடு பற்றி அண்ணாமலை பேசாதது ஏன்?- சீமான்

கோடநாடு வழக்கு குறித்து அண்ணாமலை ஏன் பேச மறுக்கிறார்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Seeman - சீமான்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “தாய்மொழி வைத்து தான் தங்களை அடையாளம் படுத்தி கொள்ள வேண்டும். திமுக ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டியது தானே. அண்ணாமலை நியாயமானவராக இருந்தால் அதிமுகவின் ஊழல் பற்றி பேசவேண்டும். அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் அவர்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் அண்ணாமலைக்கு உள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்த ரவுடிகளும், ஊழல்வாதிகளும் பாஜகவில்தான் இருக்கிறார்கள். அதிமுகவில் இருப்பவர்கள் புனிதமானவர்கள் என்பதை காட்ட திமுக ஊழல் பட்டியலை வெளியிடுகிறாரா?

we-r-hiring

வேளாண்மையை அழிப்பதை எப்படி சகித்துக்கொள்ள முடியும். வேளாண்மை பற்றிய அறிவை அனைவரும் வளர்க்க வேண்டும் என முதல்வரே சொல்கிறார். கட்டடங்கள் கட்டப்பட்ட இடத்தை திரும்ப எப்படி விளை நிலங்களாக மாற்ற முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

MUST READ