
7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் இன்று (ஆகஸ்ட் 03) சென்னையில் தொடங்குகிறது.

அயர்லாந்திற்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு!
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 12- ஆம் தேதி வரை ஹாக்கி போட்டிகள் நடைபெறுகின்றன. நடப்பு சாம்பியனான தென் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், சீனா ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கின்றனர்.
இன்று நடைபெறும் முதல் போட்டியில் தென்கொரியா- ஜப்பான் அணிகளும், இந்தியா- சீனா அணிகளும் மோதுகின்றன. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டமானது ஆகஸ்ட் 09- ஆம் தேதி நடைபெறுகிறது. அதேபோல், இந்திய ஹாக்கி அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் சீனாவுடன் மோதுகிறது.
ஏற்கனவே, மூன்று முறை சாம்பியன் கோப்பையை வென்றுள்ள இந்திய அணி, நான்காவது முறையாக கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
“3 தேசிய அணிகளை அறிவிக்குமளவு இந்தியாவில் கிரிக்கெட் திறமைசாலிகள்”- பிரையன் லாரா புகழாரம்!
16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச ஹாக்கி போட்டிகள் நடைபெறுவதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
