spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

-

- Advertisement -

 

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
File Photo

வரும் ஆகஸ்ட் 9- ஆம் தேதி அன்று ஆடிக் கிருத்திகை விழா திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள பிரசித்திப் பெற்ற முருகன் கோயிலில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. அதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் ஆடிக் கிருத்திகைக் கொண்டாடப்படவுள்ளதாலும், இந்நாளில் பக்தர்கள் காவடி, பால்குடம் ஆகியவற்றை திருத்தணி முருகன் கோயிலுக்கு எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவர்.

we-r-hiring

ஆளும் கட்சியினர் நகரில் பேனர்களை குவித்ததால் மக்கள் அதிருப்தி!

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 9- ஆம் தேதி புதன்கிழமை அன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வரும் ஆகஸ்ட் 26- ஆம் தேதி வேலை நாளாக செயல்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ