திருமணத்துக்கு முன்பு ஜோடிகளுக்கு மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் எவ்வாறு உத்தரவிட முடியும் என உயர்நீதி மன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.திருமணத்துக்கு முன்பு ஜோடிகளுக்கு மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்க முடியுமா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திருமணமான இளம் தம்பதியர் இடையே பாலியல் குறைபாடுகள் காரணமாக கருத்து வேறுபாடுகள் உருவாகி, விவாகரத்து அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், திருமணத்துக்கு முன் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்க முடியுமா என்ற கேள்வி ஏழுப்பியது. மேலும், இது போன்ற சட்டங்கள் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், இதுபோன்று அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் கருத்து தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தது.
திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக் கொலை-கணவர் கைது
