நடிகை சிந்து , கடந்த 2010ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடித்தெரு படத்தில் நடித்திருந்தார். மேலும் கருப்பசாமி குத்தகைதாரர், நாடோடிகள், தெனாவெட்டு, நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைவிற்கு சிகிச்சை பெற்று வந்தது. அதை தொடர்ந்து இரண்டு மார்பகங்களும் அகற்றப்பட்டன. இதற்கிடையில் இவர் தனது சிகிச்சைக்காக யூடியூப் வாயிலாக பலரிடம் உதவி கேட்டு கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் கொரோனா காலகட்டங்களில் பலருக்கும் உணவு, உடை கொடுத்து உதவி செய்துள்ளார்.

இந்நிலையில் இவரின் உடல் நலம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிக அளவில் பாதிக்கப்பட்டு வந்தது. அதன் விளைவாக இன்று அதிகாலை 2:15 மணியளவில் நடிகை சிந்து காலமானார். இவரது உடல் அஞ்சலிக்காக வளசரவாக்கத்தில் உள்ள இவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் திரை உலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து இவரின் இறுதிச்சடங்கு விருகம்பாக்கம் மின் மயானத்தில் நடைபெற இருக்கிறது.


