
மணிப்பூர் விவகாரத்தில் ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேரை நியமிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

வாளையாறு அணையில் குளித்த மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலி
மணிப்பூர் விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த உச்சநீதிமன்றம் அம்மாநில டி.ஜி.பி.யை நேரில் ஆஜராகும் படி உத்தரவிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, மணிப்பூர் மாநிலத்தின் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது, வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு, “மணிப்பூர் விவகாரத்தில் ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேரை நியமிக்கத் திட்டமிட்டுள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு, மறுவாழ்வு மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து நீதிபதிகள் குழு கையாளும்” என்றனர்.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தைக் கட்டுப்படுத்தவும், இயல்பு நிலைக்கு கொண்டு வரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.
பாதம் தரையில் படாதவாறு வினோதமாக கிரிவலம் சென்ற குடும்பம்
அதன்படி, முன்னாள் நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் முன்னாள் நீதிபதிகளான ஷாலினி ஜோஷி, ஆஷா மேனன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
