spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவாளையாறு அணையில் குளித்த மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலி

வாளையாறு அணையில் குளித்த மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலி

-

- Advertisement -

வாளையாறு அணையில் குளித்த மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலி

கோவை – கேரளா எல்லையில் உள்ள வாளையாறு அணையில் குளிக்கச் சென்ற முதலாமாண்டு கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Students

கோவை – கேரளா எல்லையில் உள்ள வாளையாறு அணை அன்மையில் தூர்வாரப்பட்டது. கடந்த சில வாரங்களாக கேரளாவில் பெய்து வரும் மழையால் வாளையாறு அணையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த சண்முகம் (17), நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருப்பதி ஆகிய இருவரும் கோவை நவக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி முதலாமாண்டு படித்து வந்தனர்.

we-r-hiring

death

இவர்கள் இருவரும், மேலும் ஒரு மாணவரை அழைத்துக் கொண்டு  வாளையாறு அணையில் குளித்துள்ளனர். அப்போது சண்முகம் மற்றும் திருப்பதி ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதையடுத்து உடன் வந்த நண்பர் காப்பாற்ற முயன்றும் இருவரும் ஆழத்திற்கு சென்றதால் வெளியே வந்து வாளையாறு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். உடனே விரைந்து வந்த வாளையாறு போலீசார் தீயணைப்பு மீட்பு குழுவினர் உதவியுடன் நீரில் மூழ்கிய இரு மாணவர்களின் உடலை நீண்ட நேரமாக தேடி மீட்டனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வாளையாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ