
சென்னை குரோம்பேட்டை அருகே வசித்து வந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது 19). இவர் கடந்த 2021- ஆம் ஆண்டு 12- ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள நிலையில், தான் மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்தில் தொடர்ந்து நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார். அவரது பெற்றோரும், மாணவர் ஜெகதீஸ்வரனுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

77-வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் பலத்த பாதுகாப்பு!
இந்த நிலையில், முதல் முறையாக எழுதிய நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக ஜெகதீஸ்வரன் நீட் தேர்வை எழுதியுள்ளார். அந்த தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், ஜெகதீஸ்வரன் தோல்வி அடைந்தார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த ஜெகதீஸ்வரன், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துக் கொண்டார்.
வீட்டைத் திறந்துப் பார்த்த அவரது பெற்றோர் ஜெகதீஸ்வரன் உயிரிழந்துக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்த தகவலின் பேரின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஜெகதீஸ்வரனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், வழக்குப்பதிவுச் செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மகன் உயிரிழந்த சோகத்தில் இருந்த ஜெகதீஸ்வரனின் தந்தை, இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டார். இது குறித்து தகவலறிந்த சிட்லப்பாக்கம் காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்க பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்!
நீட் தேர்வு தோல்வி காரணமாக, மகன் உயிரிழந்த நிலையில், தந்தையும் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், நீட் தேர்வால் ஒரு குடும்பமே தற்போது உருகுலைந்துள்ளது என்றும், நீட் தேர்வுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்றும், மாணவர் ஜெகதீஸ்வரனின் நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.