நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சமூக வலைதளப் பக்கங்களில் தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்கக் கோரி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் 77-வது சுதந்திர தினத்தைப் போற்றும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தேச ஒற்றுமை, சுதந்திரத்தின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில், நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் மூவர்ணக்கொடியை ஏற்றி வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி, ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் சமூக வலைதளக் கணக்குகளில் தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்க பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து, ட்விட்டர் சமூக வலைதளத்தில் தனது புகைப்படத்தை நீக்கிவிட்டு, மூவர்ண தேசிய கொடியை பிரதமர் நரேந்திர மோடி மாற்றியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பதில்!
அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் மூவர்ண தேசிய கொடியின் புகைப்படத்தை வைத்துள்ளனர்.