spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசர்வதேச அலைச்சறுக்கு போட்டிகள் ஒத்திவைப்பு

சர்வதேச அலைச்சறுக்கு போட்டிகள் ஒத்திவைப்பு

-

- Advertisement -

சர்வதேச அலைச்சறுக்கு போட்டிகள் ஒத்திவைப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று சர்வதேச அளவிலான அலைச்சறுக்கு போட்டிகள் துவங்கப்பட இருந்த நிலையில் வானிலை மாற்றம் காரணமாக போட்டிகள் இன்று ரத்து செய்யப்பட்டது.

சர்வதேச அலைச்சறுக்கு போட்டியை கோவளத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த போட்டி இன்று முதல் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்தியா, சீனா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட 11 நாடுகளில் இருந்து 74 வீரர்கள் கலந்து கொள்ள வந்த நிலையில் கடலில் காற்று இல்லாமல் அலையின் வேகம் குறைவாக இருந்ததால் அலைச்சறுக்கு போட்டிகள் நடத்த போதிய அலை இல்லாததால் போட்டிகள் இன்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டது

we-r-hiring

இதனால் அலைச்சறுக்கை காண வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். போட்டிகள் நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ