spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையில் உள்ள துணிக்கடையில் கொள்ளை - வெளியான சிசிடிவி காட்சி

சென்னையில் உள்ள துணிக்கடையில் கொள்ளை – வெளியான சிசிடிவி காட்சி

-

- Advertisement -

சென்னை தண்டையார்பேட்டையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் துணிக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்தனர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தண்டையார்பேட்டை சால்ட் லைன் தெருவில் நிஜாம் முகைதீன் (வயது22) என்பவர் ஒரு ஆண்டு காலமாக துணிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல் இரவு 10 மணிக்கு கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். நள்ளிரவில் துணிக்கடையில் மர்ம நபர்கள் இரண்டு பேர் பூட்டு, ஷட்டர் மற்றும் கண்ணாடி கதவை உடைத்து துணிகளை கொள்ளையடித்து சென்றனர்.

we-r-hiring

அருகில் இருந்த மூன்று கேமராக்கள் உடைத்து தப்பிச்சென்ற நிலையில் கதவு உடைக்கும் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் காவல் கட்டுப்பாட்டு அறிக்கை தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே. நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

MUST READ