Homeசெய்திகள்சினிமாமீண்டும் கதாநாயகியாக நடிக்கும் சோனியா அகர்வால்!

மீண்டும் கதாநாயகியாக நடிக்கும் சோனியா அகர்வால்!

-

- Advertisement -

பிரபல நடிகை சோனியா அகர்வால், சமீபகாலமாக பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது 7 ஜி எனும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் ஹாரூன் என்பவர் தயாரித்து இயக்குகிறார். கண்ணன் ஒளிப்பதிவு செய்ய சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இந்த படத்தில் சோனியா அகர்வாலுடன் இணைந்து ஸ்மிருதி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்றது. தற்போது படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ