spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஹரிஷ் உத்தமன் ஹீரோவாக நடிக்கும் 'நூடுல்ஸ்'...... ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

ஹரிஷ் உத்தமன் ஹீரோவாக நடிக்கும் ‘நூடுல்ஸ்’…… ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

நூடுல்ஸ் படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

ஹரிஷ் உத்தமன் முதன் முறையாக ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் நூடுல்ஸ். இதில் ஹரிஷ் உத்தமனுடன் இணைந்து ஷீலா ராஜ்குமார், மதன் தக்ஷிணாமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஆலியா, வசந்த், நகுணா, ஹரிதா, திருநாவுக்கரசு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை துணிவு, கர்ணன், அயோத்தி, மாமன்னன், மாவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் மதன் இயக்கியுள்ளார். சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனமும் ரோலிங் சவுண்ட் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. ராபர்ட் சர்குணம் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

we-r-hiring

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து வருகின்ற செப்டம்பர் 8ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்று பட குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

MUST READ