Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'இறைவன்' ரிலீஸ் எப்போது?

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘இறைவன்’ ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள இறைவன் படத்தில் புதிய ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நயன்தாராவும் பாலிவுட்டில் இயக்குனர் அட்லி இயக்கி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா கூட்டணியில் இறைவன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை வாமனன், மனிதன், என்றென்றும் புன்னகை உள்ளிட்ட படங்களை இயக்கிய அகமது இயக்கியுள்ளார். இதனை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

மேலும் சில நாட்களுக்கு முன்பாக இந்த படமானது ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த படத்தை வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ