Homeசெய்திகள்இந்தியாஇன்று வானில் நிகழ்கிறது 'சூப்பர் ப்ளூ மூன்'!

இன்று வானில் நிகழ்கிறது ‘சூப்பர் ப்ளூ மூன்’!

-

- Advertisement -

 

இன்று வானில் நிகழ்கிறது 'சூப்பர் ப்ளூ மூன்'!
File Photo

அரிய வானிலை நிகழ்வான ‘சூப்பர் ப்ளூ மூன்’ இன்று (ஆகஸ்ட் 30) நிகழ்கிறது.

we-r-hiring

நிலவின் தென்துருவப் பகுதியில் ஆக்சிஜன்- கண்டறிந்த ‘பிரக்யான் ரோவர்’!

பூமிக்கு மிக அருகில் நிலா வரும் போது, ‘ப்ளூ மூன்’ (அல்லது) சூப்பர் மூன் நிகழ்வைக் காணலாம். இரண்டும் சேர்த்து நிகழ்வது ‘சூப்பர் ப்ளூ மூன்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சமயத்தில் நிலா மிக பெரியதாகவும், மிகப் பிரகாசமாகவும் காட்சியளிக்கும். இந்தாண்டின் மிகப்பெரிய, மிகப் பிரகாசமாக நிலவை நாம் காணலாம்.

ஒவ்வொரு ப்ளூ மூனும், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. கடைசியாக, கடந்த 2021- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘ப்ளூ மூன்’ வெளி வந்தது. அதன் பிறகு தற்போது தான் ‘சூப்பர் ப்ளூ மூன்’ நிகழ்வைப் பார்க்கவிருக்கிறோம்.

ஒரே மாதத்தில் இருமுறை பௌர்ணமி வருவது ‘ப்ளூ மூன்’ என்றழைக்கப்படுகிறது. ‘ப்ளூ மூன்’ என்றால் நிலா நீல நிறத்தில் காட்சியளிப்பது என்று பொருள் கூறுவார்கள். ஆனால் அது உண்மை அல்ல. நிலவின் நிறம் நீல நிறமாக மாறாது. அதேநேரம், தூசித் துகள் காரணமாக, ப்ளூ மூன் ஆரஞ்சு வண்ணத்தில் காட்சியளிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நிலவின் பள்ளத்தை உணர்ந்துப் பாதையை மாற்றிய ‘பிரக்யான் ரோவர்’!

சூப்பர் மூன் மற்றும் ப்ளூ மூன் இரண்டும் சேர்ந்து நிகழ்வது மிகவும் அரிதாகக் கருதப்படுகிறது. இது 10 (அல்லது) 20 ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழும். 2037- ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சூப்பர் ப்ளூ மூனை காண முடியும்.

MUST READ