- Advertisement -
கிருஷ்ணகிரியில் வீட்டின் கதவை உடைத்து 42 கிலோ முடி திருட்டு
கிருஷ்ணகிரியில் வீட்டின் கதவை உடைத்து 42 கிலோ முடியை திருடிச் சென்றவர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை மேற்கு மாட தெருவை சேர்ந்தவர வெங்கடேசன் (49). தலை முடியை வாங்கி அனுப்பும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 26-ம் தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு ஒரப்பம் அம்மன் கோவில் விழாவிறகு குடும்பத்துடன் சென்றார். அந்த நேரம் இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற நபர், வீட்டில் வைத்திருந்த 42 கிலோ தலை முடி அடங்கிய மூட்டைகளை திருடிச் சென்றார். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.


இந்த நிலையில் வீட்டிற்கு வந்த வெங்கடேசன், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது உள்ளே வைத்திருந்த 42 கிலோ தலை முடியை காணவில்லை. இது குறித்து வெங்கடேசன் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் நகர காவல் நிலைய துணை ஆய்வாளர் பிரபாகரன் விசாரணை நடத்தினார். அதில் வெங்கடேசன் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை பார்த்த போது அதில் முடியை திருடி சென்றது காவேரிப்பட்டணம் அருகே உள்ள மிட்டஅள்ளி எம்.எஸ். நகரை சேர்ந்த ரஞ்சித்குமார் (27) என தெரிய வந்தது- அவரை கைது செய்த போலீசார்,இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட ரஞ்சித் குமார் இடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


