Homeசெய்திகள்தமிழ்நாடு"நீட் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“நீட் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

- Advertisement -

 

"நீட் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: CM MKStalin

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனிதா அகாடமியில் கணினி, தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு தையல் இயந்திரம் மற்றும் மடிக்கணினி ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

we-r-hiring

இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது ரோஹித் சர்மா சாதனை!

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நீட் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாளே அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக அமையும். ஒவ்வொரு முறை இந்த நிகழ்ச்சி நடைபெறும் போதும், நான் அனிதாவை நினைத்துப் பார்ப்பேன். கொளத்தூர் தொகுதிக்கு எத்தனை முறை வந்தாலும், எனக்குத் திகட்டாது.

கொளத்தூர் இளைஞர்கள் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவே இந்த பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் உதவித்தொகையை வழங்கவில்லை; உரிமையை வழங்கவுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அரசு விடுதியில் ராகிங்- ஆடைகளை கழற்றும்படி கூறி கொடுமை

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் பிரியா, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ