Homeசெய்திகள்இந்தியாஅரசு விடுதியில் ராகிங்- ஆடைகளை கழற்றும்படி கூறி கொடுமை

அரசு விடுதியில் ராகிங்- ஆடைகளை கழற்றும்படி கூறி கொடுமை

-

- Advertisement -

அரசு விடுதியில் ராகிங்- ஆடைகளை கழற்றும்படி கூறி கொடுமை

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சந்திரகிரியில் அரசு மாணவிகள் விடுதி உள்ளது. இதில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இதில் பார்கவி என்ற மாணவி ஜில்லா பரிஷத் பள்ளியில் 9 வகுப்பு படித்து கொண்டே விடுதியில் தங்கி உள்ளார்.

Ways to avoid College Campus Ragging and Ragging Prevention Procedure in  India|College

இதே விடுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் கரக்கம்பாடியை சேர்ந்த ரூபா என்ற மாணவி விடுதி அறையில் தன்னுடன் தங்கும் பார்கவியின் ஆடைகளை கழற்றும்படி கூறி ,கை, கால்களை பிடித்துவிடும்படி கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ரூபா தொல்லை தாங்க முடியாமல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு விடுதியில் இருந்து எப்படியாவது வீட்டிற்கு செல்லும் நோக்கில் மற்றொரு மாணவியை கொண்டு தலைமுடியை வெட்டி கொண்டார்.

பின்னர் சக மாணவி ரூபா ராகிங் செய்து தலைமுடியை கட் செய்ததாக கூறி விடுதியில் தங்க முடியாது என்றும் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் பார்கவியின் பெற்றோர் சந்திரகிரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் இரு மாணவியிடம் விசாரித்தபோது ரூபா தொல்லை தாங்க முடியாமல் சக மாணவியிடம் தலைமுடி கட் செய்து கொண்டு வீட்டிற்கு செல்ல இருந்ததாக கூறினார். இதுகுறித்து விடுதி வார்டன் வஹிமுதீன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்துள்ளார்.

MUST READ