spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது!

பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது!

-

- Advertisement -

 

பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது!
File Photo

ஆன்மீக சொற்பொழிவாளரும், விஎச்பி அமைப்பின் முன்னாள் தலைவருமான ஆர்.பி.வி.எஸ்.மணியன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

we-r-hiring

அமித்ஷா, ஜெ.பி.நட்டாவை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஆன்மீக சொற்பொழிவாளரும், விஎச்பி அமைப்பின் முன்னாள் தலைவருமான ஆர்.பி.வி.எஸ்.மணியனை இன்று (செப்.14) அதிகாலை 03.30 மணியளவில் தியாகராய நகர் காவல்துறையின் இணை ஆணையர் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.

“மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்யலாம்”- தமிழக அரசு அறிவிப்பு!

கைதுச் செய்யப்பட்ட ஆர்.பி.வி.எஸ். மணியனை ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று (செப்.14) காலை 11.00 மணியளவில் சட்டப்படி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ