spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்நான் மக்களிடம் பாசாங்கு செய்யப்போவாதில்லை - பிரதமர் ரிஷி சுனக்

நான் மக்களிடம் பாசாங்கு செய்யப்போவாதில்லை – பிரதமர் ரிஷி சுனக்

-

- Advertisement -

2023ம் ஆண்டில் நம் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று நான் மக்களிடம் பாசாங்கு செய்யப்போவாதில்லை – 2022ம் ஆண்டுக்கான இறுதி உரையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நாட்டு மக்களிடம் தெரிவித்தார்.

we-r-hiring

2022ம் ஆண்டு முடிந்து, 2023ம் ஆண்டு பிறக்கவுள்ள நிலையில் இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக் அந்நாட்டு மக்களிடம் வீடியோ வாயிலாக உரையாற்றினார். 2022ம் ஆண்டின் இறுதியில் உள்ளோம், 2023ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிற்க்கும், நாட்டு மக்களுக்கும் சிறப்பானதாக இருக்கும் என்றும் புத்தாண்டு பிறந்தால் நம் அனைத்து கஷ்டங்களும் தீர்ந்து விடும் என மக்களை நான் பாசாங்கு செய்யப் போவதில்லை என கூறியுள்ளார்.

ஆனால் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் பிரிட்டன் அரசாங்கம் உலக அளவில் முன்னிலைப்படுத்தப்படும் என்பதை மக்களிடம் தெளிவுபடுத்துவதாக கூறினார். காட்டுமிராண்டி தனமாக நடந்து வரும் உக்ரைன்-ரஷ்யா போர், உலகளாவிய பொருளாதார தாக்கம், எரிசக்தி விலை உயர்வு ஆகியவை உலக அளவில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்றார். 2023ல் மே 6 ஆம் தேதி இங்கிலாந்து நாட்டின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா வெகு விமர்சியாக நடைபெற உள்ளதையும் நாட்டு மக்களிடம் இறுதி உரையின் போது பிரதமர் ரிஷி சுனக் சுட்டிக்காட்டினார்.

MUST READ