Homeசெய்திகள்சினிமாகிங் ஆப் பாக்ஸ் ஆபிஸ்... 'ஜவான்' படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ள ஷாருக் கான்!

கிங் ஆப் பாக்ஸ் ஆபிஸ்… ‘ஜவான்’ படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ள ஷாருக் கான்!

-

- Advertisement -

நாளுக்கு நாள் ஜவானின் வசூல் வேட்டை வாயடைக்க வைத்து வருகிறது.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட்டின் டாப் ஸ்டார் ஆன ஷாருக்கான் நடிப்பில் உருவான படம் தான் ஜவான். இந்தப் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டி இருக்கிறார். மேலும் பிரியாமணி, யோகி பாபு , சஞ்சய் தத் என பல பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை தயாரிப்பாளர் கௌரி கானின் ரெட் சில்லீஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

எதிர்பார்ப்பை எகிற வைத்த இந்தப் படம் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி வெளியானது.  பிரபலமான ஷாருக்கான் படத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார். மேலும் நயன்தாரா அவருக்கு ஈடு கொடுத்து நடிப்பில் அசத்தியுள்ளார். மேலும் விஜய் சேதுபதி அவரைப் பற்றி சொல்லவா வேண்டும் மிரட்டல் ஆன வில்லனாக கலக்கியிருக்கிறார். ராக்ஸ்டார் அனிருத் இசையில் தியேட்டர்கள் அதிர்ந்தன.

ஜவான் வெளியான நாள் முதல் வசூலில் சாதனை படைத்து வருகிறது. முதல் நாளே உலகளவில் 169 கோடி வசூல் செய்தது. அதையடுத்து அடுத்தடுத்த நாட்களில் 100 கோடி வீதம் வசூல் செய்து வந்த ஜவான் தற்போது 10 நாட்கள் முடிவில் 800 கோடி என்ற அசாத்திய வசூலை அடைந்துள்ளது.

இந்திய சினிமாவில் மிக விரைவில் 800 கோடி என்ற இலக்கை அடைந்த முதல் படமாக ஜவான் பார்க்கப் படுகிறது. இதிலிருந்தே ஷாருக் கான் ஒரு குளோபல் ஸ்டார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

1000 கோடி இலக்கை எட்டுவதற்கு இன்னும் சில நாட்கள் இருக்கிறது. ஏற்கனவே ஷாருக்கானின் பதான் திரைப்படம் 1000 கோடி வசூலை தாண்டியது. தற்போது ஜவான் திரைப்படமும் 1000 கோடி அடிக்க உள்ளது.

இதையடுத்து கிறிஸ்துமஸ் தினத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள டங்கி திரைப்படம் வெளியாக உள்ளது. அந்த படமும் 1000 கோடி என்று இலக்கை அடைந்தால் ஒரே ஆண்டில் மூன்று 1000 கோடி படங்கள் கொடுத்த ஒரே ஒரு இந்திய நடிகர் என்ற பெருமை ஷாருக் கானுக்கு கிடைக்கும்.

MUST READ