நடிகர் ரவி மோகன், திருப்பதியில் பாடகி கெனிஷாவுடன் சாமி தரிசனம் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ரவி மோகன் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இது தவிர ரவி, யோகி பாபுவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும், அந்த படத்தை அவரே தயாரிக்கப் போவதாகவும் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் ரவி மோகன் – ஆர்த்தியின் விவாகரத்து விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்து வருகிறது.
அதிலும் ரவி மோகன் – ஆர்த்தியின் பிரிவிற்கு பாடகி கெனிஷா தான் காரணம் என சொல்லப்படுகிறது. அதேசமயம் ரவி – கெனிஷா இருவருமே பொது இடங்களுக்கு ஒன்றாக சென்று வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வீட்டு திருமண நிகழ்விற்கு நடிகர் ரவி, பாடகி கெனிஷாவுடன் கைகோர்த்து ஜோடியாக சென்றது பரபரப்பாக பேசப்பட்டது.
அதன் பின்னர் ரவி, கெனிஷாவுக்காக ரூ.10 கோடியில் வீடு வாங்கி தந்து இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் ரவி – கெனிஷா ஆகிய இருவரும் இணைந்து திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.