மறைந்த தி இந்து நாளிதழின் மூத்த புகைப்பட கலைஞர் கே.வி.சீனிவாசன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் இன்று அதிகாலை பிரசித்தி பெற்ற சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசித்தனர். அப்போது சொர்க்கவாசல் திறப்பு சிறப்பு நிகழ்வை சிறப்பான வகையில் புகைப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தி இந்து நாளிதழின் மூத்த புகைப்பட கலைஞர் கே. வி .சீனிவாசன், பணியின்போதே திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கிவிழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது.
புகைப்படம் எடுக்க சென்று உயிரிழந்த மூத்த புகைப்பட கலைஞர் கே. வி .சீனிவாசன் மறைவுக்கு செய்தித்துறையினரும், அரசியல்கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள இரங்கல் குறிப்பில், பத்திரிகையாளர் கே.வி.சீனிவாசன் மாரடைப்பால் இறந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன், கே.வி.சீனிவாசன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


