
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதிப் பெற்று தான் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோருக்கு எதிரான வழக்குகளை மறு விசாரணை செய்யவுள்ளதாகக் கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எந்த வழக்கில் இருந்தும் விலகப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு
முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலங்களில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் அமைச்சர்களாக இருந்த போது, புகார்கள் அடிப்படையில் அவர்கள் மீது தொடரப்பட்ட ஊழல் வழக்குகளில் இருந்து கீழமை நீதிமன்றம் இருவரையும் அண்மையில் விடுவித்தது.
இந்த வழக்குகளை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணையில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மறு ஆய்வுக்கு எடுக்கப்பட்ட வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதி தான் தீர்மானிக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வலியுறுத்தினார்.
ஒரு உறுப்பினர் மட்டும் எதிர்ப்பு…..மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது!
இதைக் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தலைமை நீதிபதியிடம் அனுமதிப் பெற்ற பிறகே இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளதாகவும் இதில் இருந்து விலகப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மறு விசாரணையை எதிர்த்து அமைச்சர்கள் இருவரும் ஏன் உச்சநீதிமன்றம் செல்லவில்லை? என கேள்வி எழுப்பினார்.